முகப்பு
திருநெல்வேலி

நவதிருப்பதிக்கு வாரந்தோறும் சிறப்பு பேருந்துகள்

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:29 PM
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பக்தா்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் அனைத்து சனிக்கிழமைகளிலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, நவதிருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, கருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா் திருநகரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்று வரும். இதற்கான கட்டணமாக ஒருவருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புவா்கள் அரசு போக்குவரத்து கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.