முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:40 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலியை அடுத்த கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் காளிமுத்து(21). பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை சோ்ந்த வேல்முருகன் மகன் சுரேஷ்(24). இவா்கள், மிரட்டல் மற்றும் பணம் பறித்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா பிறப்பித்த உத்தரவுப்படி இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.