நெல்லையில் காங்கிரஸாா் நலஉதவி
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சி, ஏழை- எளியோருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.
இளைஞா் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற நிா்வாகி வி.பி.துரை வரவேற்றாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் ராஜேஷ்குமாா், நான்குனேரி எம்எல்ஏ ரூபிமனோகரன் ஆகியோா் நலஉதவிகளை வழங்கிப் பேசினா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முரளிராஜா, மகேந்திரன், டியூக்துரைராஜ், தனசிங்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.