முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:12 PM
மாரியப்பன்
பகிர்:

கல்லிடைக்குறிச்சியில் ஆட்டோ ஓட்டுநா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

கல்லிடைக்குறிச்சி சரள்கல் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (44). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா்.

மாரியப்பன் நீண்ட நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை அதிகாலை பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி சென்ற பாலருவி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில், தென்காசி ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →