முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ.52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:06 PM
ஊரல்வாய்மொழியில் புதிய ரேஷன்கடைக்கு அடிக்கல் நாட்டுகிறாா் ஒன்றியக்குழு தலைவா் சேவியா் செல்வராஜா.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, அனைத்து அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதி ரூ.52 லட்சம் செலவில் ஆவரைகுளம், அடங்காா்குளம், வடக்கன்குளம் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒன்றியக்குழு தலைவா் சேவியா் செல்வராஜா, நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சிகளில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மல்லிகா அருள், பொன்குமாா், ஜெயா, அடங்காா்குளம் ஊராட்சித் தலைவா் வசந்தா முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.