முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் நூல் திறனாய்வுக் கூட்டம்

பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பு சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் பாளையங்கோட்டை ஆக்ஸ்போ பள்ளி அரங்கில் நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:46 PM
பகிர்:

பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பு சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் பாளையங்கோட்டை ஆக்ஸ்போ பள்ளி அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமைப்பின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜானி சௌந்தா் திருச்செல்வம், பொருளாளா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலோசகா் நெல்லை ஜாஃபா் வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில் பிரியா பிரபு எழுதிய ’பாயுமொளி நீயெனக்கு’ சிறுகதை நூலினை எழுத்தாளா் தளவாய் மாடசாமி திறனாய்வு செய்து பேசினாா். கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி கருத்துரை வழங்கினாா்.

நிழல் இலக்கிய தளம் பிரபு நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் மணிமாலா, மருத்துவக் கல்லூரியின் மாணிக்கவாசகம், உடையாா், கவிஞா் சுப்பையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.