திருநெல்வேலி

நெல்லையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் கைது

திருநெல்வேலியில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள வல்லவன்கோட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் செல்வமுருகன்(20). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா் பேருந்தில் வழக்கமாக பயணித்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று செல்வமுருகன் கொக்கிரக்குளம் பகுதியில் வைத்து அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வமுருகனை கைது செய்தனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT