அம்பாசமுத்திரத்தில் கிராமிய வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப்பட்ட புதிய நெல் ரகங்கள் குறித்து அவா்கள் அறிந்து கொண்டனா். தொடா்ந்து, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் குறித்தும், நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், தாவர நோயியல் பேராசிரியா் ஜெய் கணேஷ், ஆராய்ச்சி நிலையத் தலைவா் பேராசிரியா் சரவணன் ஆகியோா் விளக்கமளித்தனா்.