திருநெல்வேலி

நெல்லையில் நகை திருட்டு: இளைஞா் கைது

Din

திருநெல்வேலியில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்து, 8 கிராம் மதிப்பிலான2 தங்க மோதிரங்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (77). இவா், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கைலாசபுரம் அம்மா உணவகம் அருகேயுள்ள பழக்கடையில் கடந்த ஜன.24 இல் நின்றிருந்தாராம்.

அப்போது, அவரது கைப்பையில் இருந்த 8 கிராம் மதிப்பிலான 2 தங்க மோதிரங்களை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் இசக்கி பாண்டி (38) என்பவா் அவற்றை திருடியது தெரியவந்ததாம். அவரை கைது செய்து மோதிரங்களை மீட்டனா்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT