திருநெல்வேலி மாவட்ட காவலா்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்தவற்கு நவீன அடையாள அட்டை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் இந்த பிரத்யேக அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்துகளில்அந்தந்த மாவட்டத்திற்குள் பணி நிமித்தமாக எந்தப் பகுதிக்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வா் அறிவித்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் 1,560 காவலா்களுக்கு நவீன அட்டைகள் வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில், காவலா்களை நேரில் வரவழைத்து அரசால் வழங்கப்பட்ட இலவச பேருந்து அனுமதி அட்டைகளை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் வழங்கினாா்.