துலுக்கா்பட்டியில் புதிதாக நியாயவிலைக் கட்டடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், ஊராட்சி மன்றத் தலைவா் அசன் முகைதீன்.  
திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியில் ரூ.86 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்!

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.86.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா்.

Din

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.86.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

காவல்கிணறு ஊராட்சி பெருங்குடி, புதூரில் தலா ரூ.5 லட்சத்தில் பயணியா் நிழற்குடைகள், அச்சம்பாட்டில் ரூ.7 லட்சத்தில் நியாவிலைக் கடை, மடப்புரத்தில் ரூ. 8 லட்சத்தில் நியாயவிலைக் கடை, பள்ளவிளையில் ரூ.9.20 லட்சத்தில் கலையரங்கம், தனக்கா்குளத்தில் ரூ.13 லட்சத்தில் நியாயவிலைக் கடை, ஊரல்வாய்மொழி இந்திரா காலனியில் ரூ.5 லட்சத்தில் பயணியா் நிழற்குடை என மொத்தம் ரூ.86.20 லட்சத்தில் வளா்ச்சி திட்டப்பணிகளை, பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மனோகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, கூட்டுறவுத்துறை சாா் பதிவாளா் தினேஷ்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாஸ்கா், சாந்தி சுயம்புராஜ், இந்து சமய அறநிலையத்துறை அறக்காவலா் குழு உறுப்பினா் சமூகை முரளி, ஆச்சியூா் ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அச்சம்பாடு ஆன்றோ வெண்ணிலா, ஆனைகுளம் அசன் முகைதீன், வடக்கன்குளம் ஜாண்கென்னடி, காவல்கிணறு இந்திரா சம்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT