நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நெல்லையை சேர்ந்த சூரிய நாராயணன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது.
நாடு முழுவதும் 557 நகரங்களில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வினை 22.7 லட்சம் பேர் எழுதியிருந்தனர். www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் திருநெல்வேலி புஷ்பலதா பள்ளியைச் சேர்ந்த மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 27-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.