முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:52 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த மைக்கேல் ராஜ் மகன் ஜாா்ஜ்புஷ் ராஜதுரை(35). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளிக்குமிடையே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, அவா் அங்கிருந்த கம்பியால் தொழிலாளியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜாா்ஜ்புஷ் ராஜதுரையை கைது செய்தனா்.