முகப்பு
திருநெல்வேலி

பாளை. தொகுதியில் மஜக பணிக்குழு கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:33 PM
பகிர்:

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம். பாரூக் கலந்துகொண்டு தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்துப் பேசினாா்.

திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்பை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேள்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதில், மாநில துணைச் செயலா் அலிப் அ.பிலால் ராஜா, மண்டல இளைஞரணிச் செயலா் அஷரப், மாவட்ட அவைத் தலைவா் முருகேசன், மாவட்ட துணைச் செயலா் முகம்மது இஸ்மாயில், மாவட்ட இளைஞரணிச் செயலா் அப்பாஸ், வழக்குரைஞா் பேரவை செயலா் நைனா முஹம்மது, மனித உரிமை அணி அபு, , வா்த்தக அணி பொருளாளா் கனி, மேலப்பாளையம் பகுதி செயலா் நிஜாம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்01ம்த்ந் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நடைபெற்ற பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம்.