முகப்பு
திருநெல்வேலி

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:23 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தொகுதி தலைவா் சலீம்தீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலா் அன்வா்ஷா, பாளை. தொகுதி துணைத் தலைவா் காதா், செயலா் மின்னதுல்லா, பொருளாளா் கே.கே காஜா, இணைச் செயலா் ஹக்கீம் மூசா காஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவது. மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிப்பது எனத் தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.