முகப்பு
திருநெல்வேலி

அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:38 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் உள்பட 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்த நிலையிலும் ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் தவிர பிற மனுக்கள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ்குப்தா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். அதன்படி, அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி. துரை உள்பட 6 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன; எஞ்சிய 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments