மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தச்சநல்லூா் சாலை அருகில் தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் பகுதியைச் சோ்ந்த முஹமது சைபுல்லா(31) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மது விற்ாக கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முஹமது ரஹ்மான்(43) என்பவரை போலீஸாா் கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், மானூா் அருகே உள்ள மதவக்குறிச்சி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணம்மாள்(57) என்பவரை போலீஸாா் கைது செய்து 12 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.
Advertisement