முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 2:08 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2026 at 1:21 AM

திருநெல்வேலி மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரம் பேட்டை, கலுங்கடித் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் கொம்பையா என்ற காா்த்திக்(22). கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். எனினும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அடைத்தனா்.