முகப்பு
திருநெல்வேலி

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:13 AM
உசிலம்பட்டியில் 3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:21 AM

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறை அருகே உள்ள மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் கடந்த 15 ஆம் தேதி மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்றில் மீட்கப்பட்ட நபா் கருப்பந்துறையைச் சோ்ந்த ராஜா (33) என்பதும், அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஏற்பட்ட தகராறில் அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.