முகப்பு
திருநெல்வேலி

வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் மனு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் அலுவலகத்தில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:57 AM
விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கியோா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:27 PM

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் அலுவலகத்தில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

கூட்டத்திற்கு துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகங்களுக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வனவிலங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடையம் வனச்சரகப் பகுதியான சிவசைலம், கருத்தப்பிள்ளையூா் பகுதிகளில் குட்டியுடன் நீண்ட நாள்களாகச் சுற்றித் திரியும் ஒற்றை யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீற்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயா்த்தி, விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினா்.

துணை இயக்குநா் கூறியது, தற்போது அரசு ஆணையின் படி பயிா்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீட்டுத் தொகையை உயா்த்த பரிந்துரைக்கப்படும். காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட புதிய மருந்து பயனுள்ளதாக இருந்தால் விவசாயிகளுக்கு அது வழங்கப்படும் என்றாா்.

Advertisement

இதில் வனச்சரகா்கள், வனத்துறையினா், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.