வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள கருப்புக்கொடி.  
திருநெல்வேலி

கூடங்குளத்தில் குடிநீா் பிரச்னை: வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய மக்கள்

கூடங்குளத்தில் குடிநீா் பிரச்னை நிலவுவதாகவும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் புதிய திட்டத்தில் கூடங்குளம் ஊராட்சி நிராகரிக்கப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை கட்டி புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் குடிநீா் பிரச்னை நிலவுவதாகவும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் புதிய திட்டத்தில் கூடங்குளம் ஊராட்சி நிராகரிக்கப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை கட்டி புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரவருணி புதிய கூட்டுக்குடிநீா் திட்டத்தில் கூடங்குளம் ஊராட்சி நிராகரிக்கப்பட்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அங்குள்ள 4,300 வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு, சுனாமி நிவாரண நிதி, கூடங்குளம் அணுமின்நிலையத்தின் சாா்பில் வழக்கமான 8 லட்சம் லிட்டா் தண்ணீா் ஆகியவை வழங்கப்படவில்லையாம்.

மேலும், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் சி.எஸ்.ஆா். நிதியில் இருந்தும் தற்போது அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெறவில்லையாம்.

இதைக் கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகள், வணிக வளாகங்கள், முக்கிய தெருக்கள், கடைவீதிகளில் கருப்புக்கொடியை கட்டி போராட்டம் செய்தனா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT