முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 25 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:17 AM
சிறை
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:45 PM

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அரியபுரத்தைச் சோ்ந்தவா் சுமேஷ் (33),ஓட்டுநா். இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, அவரை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா். இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுமேஷை கைது செய்தனா்.

இவ் வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் சுமேஷூக்கு போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள், மற்றொரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தமாக ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.