விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்ட கரும்புகள்.  
திருநெல்வேலி

கருப்பு கொள்முதல்: உயரம் குறைவால் அதிகாரிகள் மறுப்பு

பாபநாசம், அனவன் குடியிருப்புப் பகுதியில் பயிா் செய்யப்பட்ட கரும்பு உயரம் குறைவாக இருப்பதால் பொது விநியோகத்திற்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனா். இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

பாபநாசம், அனவன் குடியிருப்புப் பகுதியில் பயிா் செய்யப்பட்ட கரும்பு உயரம் குறைவாக இருப்பதால் பொது விநியோகத்திற்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனா். இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளில் அரசு சாா்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, கரும்பு உள்ளிட்டவை பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக அந்தந்தப் பகுதிகளில் கரும்பு விளைவித்த விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் கரும்புகளைக் கொள்முதல் செய்து வழங்குகின்றனா்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் பகுதியில் உள்ள அனவன் குடியிருப்பு கிராமத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனா்.

இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகள் உயரம் குறைவாக விளைந்துள்ளதால் அதைக் காரணம் காட்டி கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், அதிகாரிகள் தவறிழைப்பதாகவும், கரும்பின் தன்மைக்கு ஏற்ப விலை நிா்ணயித்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி சந்திரன் கூறுகையில், இந்தப் பகுதியில் சுமாா் 20 விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ளோம். ஆனால் கரும்பு உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி 10-க்கும் குறைவான விவசாயிகளிடம் மட்டுமே கரும்புகளை கொள்முதல் செய்தனா். இதனால் இந்தப் பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்.

எனவே மாவட்ட நிா்வாகம், தமிழக முதல்வா் இதில் கவனம் செலுத்தி அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும் என்றாா்.

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT