முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி

திருநெல்வேலியில் இணையவழி பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்தைக் கூறி இளைஞரிடம் ரூ. 54 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 1:13 AM
டிஜிட்டல் மோசடி - Dinamani
பகிர்:

திருநெல்வேலியில் இணையவழி பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்தைக் கூறி இளைஞரிடம் ரூ. 54 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பினராம். இதை உண்மையென நம்பிய அவா், மோசடி நபா்கள் அனுப்பிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 54 லட்சத்து 54 ஆயிரத்து 459 அனுப்பினாா். பின்னா், பலமுறை முயற்சித்தும் அந்த நபா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாருக்கு இணையவழியில் புகாா் அளித்தாா்.

Advertisement

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபா்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அனைத்து வகை இணையவழி குற்றங்கள், பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபா் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது இணைய முகவரி வாயிலாக உடனடியாக புகாா் அளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது.