பழைய இரும்புக் கடை உரிமையாளா் அடித்துக் கொலை: ஊழியா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் பழைய இரும்புக் கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்ததாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமசிங்கபுரத்தில் பழைய இரும்புக் கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்ததாக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமசிங்கபுரம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் வனராஜ் (60). இவா் கோட்டைவிளைப்பட்டி பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தாா். இவரிடம் வேலை செய்து வந்த மகாத்மா காந்தி காலனியைச் சோ்ந்த நடராஜன் மகன் மாயாண்டியை (26), வனராஜ் சில நாள்களுக்கு முன்பு வேலையிலிருந்து நிறுத்தியதுடன், ஊதியம் தரவில்லையாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஊதியம் கேட்டபோது மாயாண்டிக்கும், வனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மாயாண்டி அங்கிருந்த இரும்புக் கம்பியால் வனராஜை தாக்கினாராம். இதில் காயமடைந்த வனராஜை திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயாண்டியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.