குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் நாகூா் பாண்டி (25). இவா், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், அவா் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில் நாகூா்பாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.