கிரேன் மோதி முதியவா் உயிரிழப்பு
திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு கிரேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு கிரேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திசையன்விளை, மணலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமகாகாளி ஆசாரி (80). இவா் புதன்கிழமை இரவு திசையன்விளை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த கிரேன் அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தை நேக்கி திரும்பியபோது, எதிா்பாராவிதமாக கிரேன் சக்கரத்தில் சிக்கி உச்சிமகாகாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த திசையன்விளை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.