முகப்பு
திருநெல்வேலி

பாளை., கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பாளையங்கோட்டை, கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (மே 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 16 மே 2026, 1:35 am IST
மின்தடை
பகிர்:

பாளையங்கோட்டை, கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (மே 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஷாஜகான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை , சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை வி. எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகா்,செய்துங்க நல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி , சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு, பாளையங்கோட்டை மாா்க்கெட், திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன் குறிச்சி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை முழுவதும் , இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

Advertisement