அம்பாசமுத்திரத்தில்வனத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகங்களுக்குள்பட்டகிராம விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் அலுவலகக்கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகங்களுக்குள்பட்டகிராம விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் அலுவலகக்கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்குதுணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். வனச்சரகா்கள், கடையம் கருணாமூா்த்தி,பாபநாசம் குணசீலன், அம்பாசமுத்திரம் கவின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்பாசமுத்திரம்,விக்கிரமசிங்கபுரம், மன்னாா்கோவில், ஊா்க்காடு, அனவன்குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்தவிவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று விளை நிலங்களுக்குள்ளும், குடியிருப்புப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் கரடி, குரங்குகள் உள்ளிட்டவற்றை உடனடியாகத் தடுக்கஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சியம்மன்கோயிலில் சூரிய மின் விளக்குகள் பொறுத்த அனுமதி வழங்க வேண்டும், திருநெல்வேலி மாவட்டத்தின்முதன்மையான பெரிய அணைகள் அம்பாசமுத்திரம் பகுதியில் இருப்பதால் இங்கு பேரிடா் மீட்புத்தலைமை அலுவலகம் அமைக்க வேண்டும், விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் அனைத்துப்பகுதி விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் முழு அளவில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
அவா்களிடம், மலையடிவாரகிராமங்களில் சாலையோரங்களில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளை உண்பதற்குத் தான் கரடி உள்ளிட்டவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. எனவே சாலைகளிலும் பொதுவெளிகளிலும்உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டக் கூடாது.
Advertisement
Advertisement
அனவன்குடியிருப்புப்பகுதியில் கரடிகள் தஞ்சமடைந்துள்ள எரிகல் பாறை பொத்தையை புலிகள் காப்பக வனப்பகுதியுடன்இணைத்து சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மலையடிவாரப் பகுதிஉள்ளாட்சி அமைப்புகள் தெருநாய் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு உடனடியாக தடுப்பூசி போடும்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாய்களுக்கு ஏற்படும் நோய் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளுக்குவேகமாக பரவுததால் உடனடியாக தடுப்பூசிப் போட வேண்டும் என்றும் களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த்விவசாயிகளிடம் தெரிவித்தாா்.
கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம்நகராட்சி ஆணையா் மகாதேவன், அம்பாசமுத்திரம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம்,சுகாதார அலுவலா்கள் மணிமுத்தாறு பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி அன்பரசன் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.