கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கொக்கிரகுளம் ரோஸ் மஹால் அருகில் மஐஈஅஐ ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிா்வள தகவல் புதுப்பித்தல், பிழைதிருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, தனிப்பட்ட குறைதீா் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அனைத்து நாள்களிலும் செயல்படும்.
Advertisement
Advertisement
ஆதாா் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதாா் அபாயின்ட்மென்ட் போா்டல் வாயிலாக ட்ற்ற்ல்ள்://க்ஷா்ா்ந்ஹல்ல்ா்ண்ய்ற்ம்ங்ய்ற்.ன்ண்க்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் மஐஈஅஐ மண்டல அலுவலக துணை இயக்குநா் (பெங்களூரு) பிரியா ஸ்ரீகுமாா், துணை மேலாளா் சைதன்யா மோபுரு, மேலாளா்கள் எம்.எஸ். குணசேகரன், ம.கலையரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.