சாத்தான்குளம் கல்லூரியில் 186 பேருக்கு மடிக்கணினி
சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நீ.கதிரவஆதித்தன், கல்விக் கழக நிறுவன தலைவர் பெ.மு.சுப்பிரமண்யம், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் ச.பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் இ.ராமுத்தாய் வரவேற்றார். இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் 186 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கிப் பேசினார்.
முன்னதாக கல்லூரி மாணவிகள் சார்பில், கல்லூரி முன் அனைத்து விரைவு பஸ்களும் நின்று செல்லவில்லையெனவும், அதனால் மாணவிகள், விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இக்கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களை வைக்க அறை, கூடுதல் வகுப்பறை மற்றும் நூலகக் கட்டடம் அமைத்துத் தருமாறும் கோரிக்கை வைத்தனர்.
Advertisement
Advertisement
இதனை பரிசீலித்த அமைச்சர், கல்லூரி நேரத்தில் காலை 9 மணிக்கும், மாலை 3 மணிக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தத்தில் நின்று செல்லும். அவ்வாறு நிறுத்தவில்லையெனில் என்னிடம் தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்றார்.
இன்னும் 3 மாதத்தில் இக்கல்லூரிக்கு நூலகக் கட்டடம் உள்ளிட்ட வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.எஸ்.எஸ்.ராஜ்மோகன், கூட்டுறவு வீட்டுவசதிக் கடன் சங்கத் தலைவர் என்.எஸ்.செல்லத்துரை, பழங்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மார்ட்டீன் ஜெபவீரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ரோஸ்மலர், ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவர் க.விஜயகுமார், ஒன்றிய அண்ணா தொறிற்சங்க செயலர் எஸ்.சந்திரராஜ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஆர்.கே.கணபதி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலர் பண்.கோபால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் எஸ்.தங்கப்பாண்டியன், நகர செயலர் ஏ.முருகன், அவைத் தலைவர் எஸ்.சோமசுந்தரம், தூத்துக்குடி நகர செயலர் ஏசாதுரை, ஒன்றிய செயலர்கள் முருகன் ( ஸ்ரீவைகுண்டம்) அமலிராஜன் (திருச்செந்தூர்), எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பி.வி.சங்கர், கிளை செயலர் பால்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்த் துறைத் தலைவர் சா.பூங்கொடி நன்றி கூறினார்.