பல்கலை. அளவிலான விளையாட்டுப் போட்டி:தூத்துக்குடி, பாளை. கல்லூரிகள் சிறப்பிடம்
ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி, பாளையங்கோட்டை கல்லூரிகள் சிறப்பிடம் பெற்றன.
ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி, பாளையங்கோட்டை கல்லூரிகள் சிறப்பிடம் பெற்றன.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கிவைத்தார். பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் அமைப்பாளர் ஜிம்ரிஸ் முன்னிலை வகித்தார்.
கபடி இறுதிப் போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணியும், நாகர்கோவில் ஐயப்பா கல்லூரியும் மோதின. இதில், செயின்ட் மேரிஸ் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர்.
Advertisement
Advertisement
கோ கோ போட்டியில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி அணியும், பாளையங்கோட்டை சாரதா கல்லூரி அணியும் மோதின. இதில், சாரதா கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர். மேலும், சிறந்த ஆட்டக்காரர்கள் பல்கலைக்கழக அணி சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்தையா, சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன், குருபரன், பேராசிரியை சுபா, உடற்கல்வி இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.