தூத்துக்குடி

கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத் திருவிழா

DIN

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கொம்புத்துறையினில் புனித சவேரியாரால் கட்டியெழுப்பப்பட்ட புனித முடியப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு மறுநாள் (ஜன.2) திருவிழா நடைபெறும்.
இதையொட்டி, கடந்த டிச. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா தினமான திங்கள்கிழமை காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை வகித்து, திருப்பலி நடத்தினார்.
நிகழ்ச்சியில் பங்குத் தந்தைகள் ஆறுமுகனேரி ஸ்டார்வின், சிங்கித்துறை சேவியர் ஜார்ஜ், அமல்ராஜ், உபர்ட்டஸ், புன்னக்காயல் கிஷோக், சந்தியாகு, பழையகாயல் சகாயராயன், வீரபாண்டியன்பட்டினம் ஆண்ட்ரூ டிரோஸ், சில்வெஸ்டர், வில்சன், ஜெகதீஷ், சகேஷ் மற்றும் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவில்  சிறுவர், சிறுமியர் புதுநன்மை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆறுமுகனேரி, சிங்கித்துறை, தூத்துக்குடி, ஏரல், பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டினம், ஆலந்தலை, அமலிநகர் பகுதியைச் சேர்ந்த இறைமக்கள் தனித்தனியாக திருப்பலி நடத்தினர்.
 ஏற்பாடுகளை பங்குத் தந்தை மரிய ஜான் கோஸ்தா மற்றும் கொம்புத்துறை ஊர்நல கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT