தூத்துக்குடி

பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

DIN

தூத்துக்குடியில் மனைவி மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (29). இவர், வாகைகுளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சர்மிளா (24). தம்பத்திக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 6.12.2014இல்  குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த சுடலைமணியிடம் சர்மிளா பணம் கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சர்மிளா மீது ஊற்றிவிட்டாராம். உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சர்மிளா உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீஸார், சுடலைமணியை கைது செய்தனர்.  இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜன், குற்றம்சாட்டப்பட்ட சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT