தூத்துக்குடி

குடிநீர் வழங்கக் கோரி ஆறுமுகனேரியில் பெண்கள் காலிக் குடங்களுடன் மறியல்

DIN

சீரான குடிநீர் விநியோகம் கோரி, ஆறுமுகனேரியில் பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சிஅலுவலகம் முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆறுமுகனேரி தேர்வு நிலை பேரூராட்சி 6ஆவது வார்டு பாரதி நகர் மேலத் தெரு மக்களுக்கு கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். பக்கத்துத் தெருக் குழாயிலும் இப்பகுதியினரை தண்ணீர் பிடிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால்  ஆத்திரமடைந்த சுமார் 30 பெண்கள் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு நிர்வாக அதிகாரி இல்லாததால் அலுவலகம் முன் ஆறுமுகனேரி-காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் அமர்ந்து நண்பகல் 12 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆறுமுகனேரி போலீஸார், அவர்களிடம் சென்று பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர், நண்பகல் 12.30 மணியளவில் நிர்வாக அதிகாரி குற்றாலிங்கம் வந்து, குடிநீர் கிடைக்க ஆவன செய்வதாக பெண்களிடம் கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT