தூத்துக்குடி

மது விற்பனை: பெண் கைது

DIN

கயத்தாறு அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து பணியில் சென்றபோது, தெற்கு மயிலோடை பேருந்து நிறுத்தம் பின்புறம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் 20 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர், அதே பகுதி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி இசக்கியம்மாள் (35) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த மது பாட்டில்களை  பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT