தூத்துக்குடி

இறகுப் பந்துப் போட்டி: சிவகாசி அணியினர் முதலிடம்

DIN

கோவில்பட்டியில் இரு நாள்கள் நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் இறகுப்பந்துப் போட்டியில் சிவகாசி அணியினர் முதலிடம் பெற்றனர்.
கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் சாய்சிட்டி விளையாட்டரங்கில் ஆண்களுக்கான இரட்டையர் இறகுப்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 80 அணிகள் பங்கேற்றன.
சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மேற்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ்   போட்டிகளை தொடங்கிவைத்தார்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிவகாசி  ஏ.ஜே. ஸ்டேடியம் வீரர்கள் நந்தகுமார் - சிவராம் அணியினர் முதல் பரிசையும், கோவில்பட்டி யூனியன் கிளப் வீரர்கள் செல்வின்பால் - அருள்காந்தராஜ் அணியினர் 2ஆம் பரிசு, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருண் - கிறிஸ்டோபர் அணியினர் 3ஆம் பரிசு, கோவில்பட்டி இலக்கிய மன்ற அணி வீரர்கள் சுந்தர் - சரவணன் 4ஆம் பரிசையும் பெற்றனர்.
பரிசளிப்பு விழா:  பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட இறகுப்பந்துக் கழக இணைச் செயலர் சுப்புராஜ் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசு ரூ.4,444 மற்றும் கோப்பை, 2ஆம் பரிசு ரூ.3,333 ஆம் பரிசு ரூ.2,222, 4ஆம் பரிசு ரூ,1,111  வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் சுப்பாராஜ், பரமேஸ்வரன், நாகராஜன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT