தூத்துக்குடி

கோட்டூர் குருஈஸ்வரமுடையார் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

தென்திருப்பேரை அருகே உள்ள கோட்டூர் அருள்தரும் உமையாள் உடனுறை அருள்மிகு குருஈஸ்வரமுடையார் கோயிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மஓகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் ஆலயமான இக்கோயிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கால பூஜைகள் மற்றும் கும்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உமையாள், குருஈஸ்வரமுடையார் மற்றும் குரு விநாயகர் , குரு சுப்பிரமணியர், நடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் சிவபிரகாச தேசிய சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை குருஈஸ்வரமுடையார் கோயில் திருப்பணிக் குழு மற்றும் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT