தூத்துக்குடி

குடிநீர் இணைப்பு துண்டிப்பைக் கண்டித்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் முற்றுகை

DIN

கோவில்பட்டியில் வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் 3 மாதங்களுக்குத் தாற்காலிகமாகத் துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து,திருமண மண்டபம், மருத்துவமனை,விடுதிகள் உள்ளிட்ட 450 குடிநீர் இணைப்புகளை 3 மாதங்களுக்குத் தாற்காலிகமாகத் துண்டிக்கும் பணி சில தினங்களில் தொடங்கவுள்ளதையறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்,செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் ராஜகுரு, ராஜேந்திரன், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை நகராட்சி பொறியாளர் சுப்புலட்சுமியிடம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT