தூத்துக்குடி

ஆறுமுகனேரி அன்னம்மாள் பள்ளி 100% தேர்ச்சி

DIN

ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 41 மாணவ- மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். கணிதத்தில் 5 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூக அறிவியலில் 4 பேரும் சதம் பெற்றுள்ளனர். 16 பேர் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 201 மாணவ- மாணவியரில் 194 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97 சதவீதமாகும். கணிதம் மற்றும் அறிவியலில் தலா இருவரும் சமூக அறிவியலில் 7 பேரும் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆறுமுகனேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 78 மாணவியர் தேர்வெழுதி 76 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.5 சதவீத தேர்ச்சியாகும். 21 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.
ஆறுமுகனேரி இந்து உயர்நிலைப் பள்ளியில் 32 மாணவ- மாணவியர் தேர்வெழுதி 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94 சதவீத தேர்ச்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT