தூத்துக்குடி

முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். இதில், உதவி சுகாதாரப் பணிகள் திட்ட அலுவலர் கண்ணியம்மாள், மாவட்ட தாய், சேய் நல அலுவலர் ரகுமத் நிஷா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வரவேற்றார்.
இதில், சித்த மருத்தவ அலுவலர் அன்புமலர், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் நம்பி, பள்ளிக் குழந்தைகள் மருத்துவ அலுவலர் அண்டனி, சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், சுகாதார ஆய்வாளர்கள் மந்திரராஜன், ஜெயபால், தங்கப்பாண்டி, ராஜசேகர், குருமூர்த்தி, செவிலியர்கள் பாக்கியதாய், சுசிலாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT