தூத்துக்குடி

சட்டத்தால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியாது: எஸ்.பி. பெ.மகேந்திரன்

DIN

சட்டத்தால் மட்டுமே சாலை விபத்துகளைத் தடுக்க முடியாது என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன்.
 தூத்துக்குடியில் நடைபெற்ற 'சாலைப் பாதுகாப்பு வகுப்பறை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு  துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் பேசியது:
  தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் சூழல் உள்ளது. கடந்த மாதம் மட்டும் சாலை விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 75 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்துக்கு முக்கிய காரணம் நமது சிந்தனை. சாலையில் செல்லும் போது ஒரே சிந்தனையில் வாகனத்தை ஓட்ட வேண்டும். பெரும்பாலான விபத்துகள் சாலை விதிமுறைகளை மீறுவதால் தான் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் சாலை விதிமுறைகளை மதித்து கடைப்பிடிக்க வேண்டும்.
அதிவேகம், அதிக பாரம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்துதல் போன்றவைதான் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியர் மோட்டார் வாகனங்கள் ஓட்டக்கூடாது. அதுபோல் முதியவர்களும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
 வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுக்கும் முன்பு, பிரேக் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும்.
 விபத்துகள் அதிகம் நிகழும் பகுதியான, கயத்தாறு நான்கு வழிச்சாலையில் வேக அளவீட்டுக் கருவி (ஸ்பீடு ரேடார் எக்குயிப்மென்ட்) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தினால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியாது. சாலை விதிகளை பின்பற்றினால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், மாநகர உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்,  வட்டார போக்குவரத்து அலுவலர் ரெங்கநாதன், காவல் ஆய்வாளர்கள் முத்து, வனசுந்தர், சிவகுமார் உள்ளிட்டோர் கலது கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT