25 பேருக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு வழங்கல்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு வழங்கும் நிகழ்வு காயாமொழி அருகே நல்லூரில் நடைபெற்றது.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு வழங்கும் நிகழ்வு காயாமொழி அருகே நல்லூரில் நடைபெற்றது.
பாஜக கிளைத் தலைவர் ஏ.மணி தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் கரண், சோமசுந்தரி ஆகியோ ர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட மகளிரணிச் செயலர் கு.நெல்லையம்மாள் பங்கேற்று 25 பேருக்கு இலவச எரிவாயு உருளை இணைப்புகளை வழங்கிப் பேசினார். இதில், பாஜக நகர நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.