முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

Updated On : 23 ஜூலை 2018, 8:01 am IST
பகிர்:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ரதிமுனிஸ்ரீ கொடியசைத்து தொடக்கிவைத்தார். தலைமையாசிரியை சாந்தினி முன்னிலை வகித்தார்.  பேரணியில், பள்ளி மாணவர், மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடியும், கோஷமிட்டபடியும் சென்றனர். ஜோதி நகர், புதுரோடு, கடலையூர் சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு வழியாக பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில், மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments