தூத்துக்குடி

சபரிமலை விவகாரம்: "நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும்'

DIN

நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்க வலிலியுறுத்தியும், கேரள அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சியினர் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில பொதுச் செயலாளர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆறுமுகனேரி ரயில் நிலையம் முன்பு அவர்களை ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் கணேஷ்குமார், உதவி ஆய்வாளர் மாடசாமி ஆகியோர்  மறித்து கைது செய்தனர்.
அப்போது அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்க வலியுறுத்தியும், ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்திய கேரள அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்தோம்.
சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக கூறுகிறார்கள். எந்தத் தீர்ப்பையும் உடனடியாக அமல்படுத்த முடியாது. மறுசீராய்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அங்குள்ள கம்யூனிஸ்ட்  அரசு, மக்களுக்கு எதிராக அனைத்தையும் செய்துள்ளது. சபரிமலையில் பக்தர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 
நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலை புனிதம் காக்க வேண்டிய எற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT