தூத்துக்குடி

கல்லூரியில் பசுமை நடை நிகழ்ச்சி

DIN

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட அணி மற்றும் இயற்கை கழகத்தின் சார்பில் பசுமை நடை நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு,  கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில்,  இளையரசனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு  கல்லூரி வளாகத்தில் உள்ள தாவரவியல் தோட்டத்தை சுற்றிக் காண்பித்து, அந்தத் தோட்டத்தில் உள்ள மரங்கள்,  பூச்சியினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்பட்டது.  
மேலும்,  மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம்,  விலங்குகள் பாதுகாப்பு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டு விளக்கிக் கூறப்பட்டது.  
ஏற்பாடுகளை இயற்கை கழகப் பொறுப்பாளரும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான மகேஷ்குமார் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT