தூத்துக்குடி

திருச்செந்தூர் கடலில் குளிக்க 2ஆவது நாளாக தடை

DIN

திருச்செந்தூர் கடலில் குளிக்க 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் தடைவிதிக்கப்பட்டதால், கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும், அலைகள் 2.8 மீட்டரிலிருந்து 3.4 மீட்டர் வரை எழக்கூடும் என்பதால், புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஆக.23) இரவு வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தது.
இதையடுத்து, திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 2ஆவது நாளான வியாழக்கிழமையும் பக்தர்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல், படகுகளை கரைகளில் நிறுத்தியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT