தூத்துக்குடி

இலவச மருத்துவ முகாம்

DIN


ஆத்தூரில்...
தேமுதிக நிறுவனர்- தலைவர்  விஜயகாந்த்  பிறந்த நாளை முன்னிட்டு ஆத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
 நகரத் தலைவர்  சிவா தலைமை வகித்தார்.   மாவட்ட துணைச் செயலர் தில்லை யோக ஆனந்தன், ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஷேக் அன்சார்,  ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம்,  மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஆத்தூர் நகர துணைச் செயலர் அப்துல் காதர்,  நகர மாணவரணிச் செயலர் நாகேந்திரன்,  நகர துணைச் செயலர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
   மாவட்டச் செயலர் ஆறுமுக நயினார் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.  தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் எல்.ஆர். நகர்  கேர்&கியூர் அக்குபஞ்சர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ பரிசோதகர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  ஏற்பாடுகளை ஆத்தூர் நகரம் மற்றும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய தேமுதிக பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


உடன்குடியில்...
 உடன்குடி கிறிஸ்தியாநகரம் சேகரம் ஜே.கே.பெஸ்ட் ஐயரின் 208 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
பாவூர்சத்திரம் பெல் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டி.பொன்ரவி தலைமை வகித்தார். சேகர குருக்கள் ஆசா தேவதாஸ், செல்வன் மகாராஜா, பண்டாரஞ்செட்டிவிளை சேகர குரு ஜான் சாமுவேல் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். 
மருத்துவர்கள் ரூபஸ் ராஜதுரை, பெல்லா கிளாடிஸ், பிரேம் ஆனந்த், கிறிஸ்டினா, இம்மானுவேல், கிரிஷ் தீபக், சாரங்ககுமார்,பிரபுராஜ், வெங்கடேஷ்பாபு  அடங்கிய குழுவினர் பொதுமக்களுக்கு அனைத்து நோய்கள் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 
ஏற்பாடுகளை தூய மாற்கு ஆலய பரிபாலனர் எஸ்.   ஞானராஜ் கோயில்பிள்ளை, சேகர செயலர் பால்ராஜ், பொருளாளர் பிரின்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT