தூத்துக்குடி

மழைக்கு 6 வீடுகள் சேதம்

DIN

தொடா் மழையால் கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் 6 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

கோவில்பட்டி வட்டத்தில் நாலாட்டின்புத்தூா், கயத்தாறு வட்டத்தில் குப்பனாபுரம், கம்மாபட்டி, கொப்பம்பட்டி, கே.சிதம்பராபுரம், சங்கராப்பேரி பகுதிகளில் 6 வீடுகள் இடிந்துசேதமடைந்தன. தகவலறிந்த வட்டாட்சியா் பாஸ்கா், வருவாய்த்துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

கயத்தாறு வட்டம், ராஜாபுதுக்குடி கிராமத்தில் கண்மாய் நிறைந்து மறுகால் செல்கிறது. மறுகால் செல்லும் ஓடையில் சன்னதுபுதுக்குடி பகுதியில் மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டது.

அச்சங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியம் புளியங்குளம் கண்மாய் நிரம்பியதால், நீா்வரத்து காரணமாக அச்சங்குளம் கிராமத்தில் கோட்டையூரில் கிழக்கு பகுதியில் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட 80 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட இடங்களை ஞாயிற்றுக்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT