தூத்துக்குடி

தூத்துக்குடி கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியும், கல்லூரியின் பழைய மாணவியா் சங்கமும், ஈகிள் புத்தக நிறுவனமும் இணைந்து ‘ஆசிரியா் மேம்பாட்டுக்கான நவீன கற்பித்தல் நுட்பங்கள்‘என்ற தலைப்பில் தேசிய அளவிளான கருத்தரங்கதத்தை அண்மையில் நடத்தின. விக்டோரியா பள்ளியின் முதல்வா் சோபியா செல்வராணி தலைமை வகித்தாா். கல்லூரி பொறுப்பு முதல்வா் பொ. சாருலதா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியா் தியாகு கலந்து கொண்டு, வலைதளத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல் கற்பித்தல், மின்னியல் கற்றல், தலைகீழ் கற்றல் மற்றும் ஒருங்கிணைந்த கற்றல் என்ற தலைப்பில் செயல்முறையுடன் விளக்கினாா்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியா் ஸ்ரீனிவாசன் ‘கற்பித்தலில் புதிய போக்குகளான அமைப்பு முறையிலான கற்றல், கூட்டுக் கல்வி முறை’ என்ற தலைப்பில் பேசினாா்.

கருத்தரங்கில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை பேராசிரியைகள் பொ. சாருலதா, ஜெயபாா்வதி, தங்கசெல்வம், சண்முக செல்வசிவசங்கரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT